நாயுடு மற்றும் நாயக்கர் பிரிவுகள் உள்ளிட்ட பிரிவினரின் மாவட்ட ஆலோசனை கூட்டம்

கோவையில் நடைபெற்ற தமிழக நாயுடு பேரவை ஆலோசணை கூட்டத்தில் பேசிய, மாநில தலைவர் டாக்டர் குணசேகரன் வரும் சட்டமன்ற தேர்தலில் எங்களது சமூகத்திற்கு உரிய மரியாதை அளித்து ,சட்டமன்ற தேர்தலில் உரிய சீட் வழங்கும் கட்சிகளுக்கு எங்களது ஆதரவை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கோவையில் நாயுடு பேரவையின் சார்பில் நாயுடு மற்றும் நாயக்கர் பிரிவுகள் உள்ளிட்ட பிரிவினரின்  ஆலோசனை கூட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர். நவநீதகிருஷ்ணன் நாயுடு தலைமையில் நடைபெற்ற இதில், கோவை மாவட்ட நாயுடு பேரவை தலைவர், ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நாயுடு பேரவையின் மாநில தலைவர் குணசேகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் நாயுடு, நாயக்கர் வகுப்பை சார்ந்த அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு தமிழகத்தில் மிகப்பெரிய அமைப்பாக உள்ளதாகவும், தற்போது தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் உறுப்பினர்கள் உள்ளதாக கூறிய அவர், ஜாதி வாரியாக செய்யும் ஒதுக்கீடை நிறுத்தி தகுதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும், மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் எங்களது சமூகத்திற்கு உரிய மரியாதை அளித்து ,சட்டமன்ற தேர்தலில் உரிய சீட் வழங்கும் கட்சிகளுக்கு எங்களது ஆதரவை வழங்க உள்ளதாக தெரிவித்தார்.