கமலே ஆயினும் நா காக்க

ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு புதுவரவு உண்டு. இந்தமுறை தமிழகத்தில் நடக்கும் பாராளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களுக்கும் ஒரு புதுவரவு கிடைத்திருக்கிறது. அதுதான் த¤ரையுலக சகலகலா மன்னன் கமல்ஹாசன் துவங்கி தேர்தலில் பங்கேற்ற்க்கும்  மக்கள் நீதி மய்யம்.

சில நேரங்களில் கமல்ஹாசனின் அறிவுத்திறன் மற்றும்  பேச்சு மக்களுக்குப் புரியவில்லை என்று தமிழக காட்சிகளை  சேர்ந்த  சிலர் குறைபட்டுக் கொள்கின்றானர். ஆனால், இந்தத்தேர்தல் பிரச்சாரத்தில் அவர் இங்கே பேசியது நாடு முழுவதும் பலருக்கும் பலவகையிலும் புரிந்துவிட்டது என்பது இங்கு நடக்கும் அமளி, துமளியில் இருந்து நன்கு தெரிகிறது. நாட்டின் பிரதமரே இதற்கு ‘ரெஸ்பான்ஸ்’ செய்து இருக்கிறார் என்றால் இவரது பேச்சு எப்படி புரிந்திருக்கிறது என்று பாருங்கள்.

ஆனால், எதற்குப்பேசினார் என்றுதான் யாருக்கும் புரியவில்லை. தமிழில் இடம், பொருள், ஏவல் என்று ஒன்று உண்டு. அதாவது, தேவையான இடத்தில் தேவையான விஷயத்தை பேசுவது. அதுவும் மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் என்றால் அவர்களுக்கு இதற்கென்று தனிப் பொறுப்பே வந்துசேர்ந்து விடுகிறது. ஆனால், கமலின் தற்போதைய பேச்சு இது எதிலும் சேர்ந்ததாகத் தெரியவில்லை.

சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி. இதற்கு விளக்கம், வியாக்கியானம் என்று போய்க்கொண்டே இருக்கிறது. பிறகு தனித்தனியாக இந்து, தீவிரவாதி என்ற கிளைகள் பிரிகிறது. சாதாரண மனிதரின் பார்வையில் பார்த்தால் இது தேவையா என்றுதான் தோன்றுகிறது.

எல்லா மதங்களும் அன்பையும், கருணையையும்தான் போதிப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். அப்படி இருக்கும்போது நியாயமாக பார்த்தால் ஒரு கொலைகாரரோ, தீவிரவாதியோ இந்த அடைமொழிக்குள் வருவாரா என்று தெரியவில்லை. இந்த நிலையில் எதற்கு கமல் புதுப்புது அடையாளங்களைத் தரவேண்டும்? அதுவும் தேர்தல் பிரச்சாரத்தில்? என்றுதான் புரியவில்லை.

தமிழ்நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் அடுத்த தலைமுறை வரை பாதிக்கும் கல்வித்தரம், குடிநீர் பற்றாக்குறை, வேலையில்லாத் திண்டாட்டம், குறைந்து வரும் குடும்ப உறவு, பாசம், அழிந்து  வரும் ஆரோகியம், மாசுபட்டுவரும் சுற்றுச்சூழல் என்று பிரச்சனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றைக் குறித்து பல மணிநேரம்  மக்களுக்குப்  புரிந்த மொழியில்  அல்லது  இவரது அறிந்த  மொழியில் பல மணிநேரம் பேசலாம். அதுவும் இல்லையா, தமிழ்நாட்டின் பொருளாதார நிலை, கொள்கை என்று ஏதாவது பேசலாம். பேசுவதற்கு ஆயிரம் தகவல்கள்  இருக்கின்றனர்.

அவற்றையெல்லாம் அழுத்தமாகப்பேசி மக்கள் மனதில் தன் கட்சியை, கட்சிப் வேட்பாளரைப்பதிவதை விட்டுவிட்டு, அந்தத்தீவிரவாதி, இந்தத் தீவிரவாதி என்று அதுவும் தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவது, பிறகு பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு கொடைக்கானலில் ஓய்வு, பிறகு மீண்டும் கிளம்பி இது சரித்திரப்பூர்வமான உண்மை என்று விளக்கம்  அளிப்பது என உங்கள் பயணம் ஒன்றும் விளங்கவில்லை (உங்கள் பேச்சை போலவே).

கமல்ஹாசன் அவர்களே, உங்களிடம் மக்கள் ரொம்ப எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் வித்தியாசமாக, ஒரு புதுமையான நல்லவழியை அடையாளம் காட்டுவீர்கள் என்று நினைப்பவர்கள், நினைத்தவர்கள் பலர். ஆனால், நடப்பதை  பார்க்கும் போது நீங்கள் மற்றவர்களைப்  போல வழக்கமான பரபரப்பு அரசியல்தான் செய்கிறீர்களோ என்று தோன்றுகிறது. அப்படி நான் செய்யவில்லை என்பதையோ அல்லது நானும் அரசியல் தான் செய்கிறேன்  என்பதையோ   நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும், உங்களை நம்பும் வாக்காளர்களுக்குக்காக .

உங்களை அரசியலில் ஆதரித்துப்பேசுபவர்கள், எதிர்த்துப்பேசுபவர்கள் ஆகியோரைவிட, நீங்கள் அடிக்கடி கூறும் தமிழக மக்கள் மிக முக்கியானவர்கள். அன்றாட வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களில்  மாட்டிக்கொண்டு  வால்பவர்கள் காலகட்டத்தால் யாராவது வந்து வழிகாட்ட மாட்டார்களா? தலைமைப் பொறுப்பேற்று நல்லது செய்ய மாட்டார்களா என்று எதிர்பார்ப்பது அவர்களின் வாடிக்கையாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. நீங்களாவது இருளை விரட்டி ‘டார்ச்’ அடித்து வெளிச்சதைக் காட்டப்போவதாக நினைக்கிறார்கள். அவர்களின் எண்ணத்தில் மண்ணை போட்டுவிடாதீர்கள்.

இப்போதும் ஒன்றும் தாமதம் இல்லை. நீங்கள் யாருக்கும் உங்களை நிரூபிக்க வேண்டியதில்லை, மக்களைத் தவிர. அதுவும், நீங்கள் பொது வாழ்க்கைக்கு வந்ததால்….

திரைப்படங்களில் நீங்கள் கையாண்ட முறைகள் மிகவும் சிறப்பானவை என இந்திய  திரையுலகமே  போராடுகின்ற வகையில் வல்லதவர் நீங்கள். தொழில் என்பதால் செயல்  எதுவாக இருந்தாலும், அது நடனமோ, பாடுவதோ, சண்டைக்காட்சியோ, வசன உச்சரிப்போ, மேக்கப்போ, திரைக்கதையோ எதுவானாலும், அதை முழுமையாகக் கற்றுக்கொண்டு அதில் உங்கள் முத்திரையைப் பதிப்பது, உங்களுக்கு என்று ஒரு தனி பாணியை உருவாக்குவது எனப்புகழ் பெற்றவர் நாங்கள்.

ஏன் அதை அரசியலிலும் செய்யக்கூடாது. அதைத்தானே உங்கள் ரசிகர்களுக்கும்,சாதாரண மக்களும் எதிர்பார்க்கிறார்கள் உங்களிடம். பலர் பல விதங்களில் அரசியலில் ஈடுபட்டு கொண்டிருக்க , உங்களுடன் நடிப்பவர்  அரசியலுக்கு வருவதாக சொல்லிக்கொண்டே இருக்க, நீங்கள் அரசியலுக்கும் வந்தாயிற்று, இயக்கமும் தொடங்கியாயிற்று, தேர்தல் களத்திற்கும் வந்தாயிற்று, பிறகென்ன?

எப்பொழுதுமே கமல் படம் என்றால் தரமான படம், அதனால் நிச்சயம் ஏதாவது புதுமை இருக்கும் என்று மக்கள் மனதில் நின்றவர் நீங்கள். பல வருடம் கழித்து பார்த்தாலும் அபூர்வ சகோதரர்கள், இந்தியன், ராஜபார்வை, பதினாறு வயதினிலே, மூன்றாம் பிறை போன்ற படங்களைப் போல மனதில் நிற்கும் உங்கள் படைப்பு. அந்தத் திறமை அரசியல்வாதி கமல்ஹாசனுக்குச்கிடையாதா?! அப்படியொரு செயல் உங்களுக்கு தெரியாதா? . உங்களை மக்கள் நம்புகிறார்கள். நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று கவனித்துக் கொண்டும் இருக்கிறார்கள். உழைத்து சேர்த்து புகழுக்கு, மேலும் மகுடம்  சூடப்போகிறீர்களா? இல்லை, இருக்கும் புகழையும் இழிவுபடுத்திக்கொள்ளப்போகிறீர்களா? என்ன செய்வது என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.