என். ஜி. பி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

என். ஜி. பி. கலை கல்லூரியின் 23வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையின் தலைவர் நல்ல. பழனிசாமி பேசுகையில்;  என்.ஜி.பி கல்லூரியில் படித்த மாணவர்கள் தங்களது ஒழுங்குமுறையை காட்டிலும் ஒரு நல்ல குடிமகன்களாக மாற்றி இன்றைய தினம் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுள்ளனர். இதற்காக அனைத்து  மாணவர்களும் பெருமையடைய வேண்டும்., என்றார். மேலும், இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் பேட்டியை பார்க்கையில், இளைஞர்கள் எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும் என்றும் , உற்பத்தி திறனில் இந்தியாவை மிக சிறந்த நாடாக மாற்ற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, அவர் ஒரு வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதைப்பற்றி என்னிடம் கேட்டால் நான் தவறு என்பேன், இந்தியர்கள் குறைந்தபட்சம் 12 மணி நேரம், அதாவது வாரத்திற்கு 84 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். அந்த நோக்கத்தில், மாணவர்கள் கடினமாக உழைத்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும், தங்களுக்கான அடையாளத்தை தனித்துவமாக உருவாக்கி கொள்ள வேண்டும் என பேசியவர்., பட்டம் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இவரை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் விஞ்ஞானி டி.எம்.கோட்ரேஷ் பேசுகையில், மாணவர்கள் அனைவரும் தங்களது வாழ்க்கையின் முக்கியமான நாளினை அடைந்ததற்கு வாழ்த்தினார். மாணவர்கள் அர்ப்பணிப்புடன் கற்றல் செயல்பாடுகளில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும். டாக்டர் என்.ஜி.பி. கல்வி நிறுவனம் மாணவர்களின் வளர்ச்சியிலும், சமூக வளர்ச்சியிலும் அக்கறை உடன் செய்யலாற்றுவது மிகுந்த மகிழச்சியைத் தருகிறது என்று குறிப்பிட்டு பேசியவர்.,  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு இடையேயான வேறுபாடு மற்றும் அதனை குறித்து விரிவான விளக்கத்தையும்  மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இந்நிகழ்விற்கு கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையின் தலைவர் நல்ல.பழனிசாமி, என்.ஜி.பி.கல்லூரியின் செயலாளர் தவமணி பழனிசாமி, கல்லூரி அறங்காவலர் அருண் பழனிசாமி மற்றும் கல்லூரி முதல்வர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.

இதனை தொடர்ந்து, இதில் இளங்கலையில் 1769 மாணவர்களும், முதுகலையில் 307 மாணவர்களும், முனைவர் பட்டம் 1 மாணவர் என மொத்தம் 2163 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.