கே.எம்.சி.ஹெச். – முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கே.எம்.சி.ஹெச். ஆக்குபேசனல் தெரபி கல்லூரியின் சார்பாக முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி தலைமை வகித்தனர். கல்லூரியின் தலைவர் டாக்டர் சசிதர் ராவ் வரவேற்புரை வழங்கினார். நிகழ்வில் 70 முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு கல்லூரியில் கல்வி பயின்றபோது தாங்கள் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இவ்விழாவை கல்லூரியின் ஆசிரியர்கள் பிரவின் மற்றும் கிருஷ்ணா ஒருங்கிணைத்தனர்.