இந்துஸ்தான் அறிவியல் கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகள்

ஈரோடு, பள்ளிக் கல்வித்துறை மற்றும் சென்னிமலை, அம்மாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி சார்பில், 2023 – 2024ம் ஆண்டிற்கான பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை சென்னிமலை செல்லும் வழியில் ஈங்கூரில் அமந்துள்ள இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் சதுரங்கம் மற்றும் கேரம் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டியினை இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணயன், நிர்வாக அறங்காவலர் பிரியா சதீஸ்பிரபு ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர்.

இதில் முதல்வர் ராமன் தலைமையுரையாற்றினார். இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரி சிவசங்கர் முன்னிலை வகித்தார். சென்னிமலை, அம்மாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் குமார் மற்றும் காமராஜர் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் செந்தில்நாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

இப்போட்டியில் பெருந்துறை குறுமையத்திற்குட்பட்ட 80க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 800க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். இதில் 11,14,17 மற்றும் 19 வயதிற்குட்டபட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

இவ்விளையாட்டு போட்டியில் பங்கேற்ற பள்ளி குழந்தைகளின் அனைத்து வசதிகளையும், தேவையான உதவிகளையும் இந்தஸ்தான் கல்வி நிறுவனம் செய்துள்ளது.