தமிழ்நாடு வேளாண் பல்கலையில் அங்கக வேளாண்மை பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் வருகின்ற ஆகஸ்ட் 7 ஆம் தேதி அங்கக வேளாண்மை கட்டண பயிற்சி நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் அங்கக வேளாண்மையின் அடிப்படை நெறிமுறைகள், அங்கக மேலாண்மை, அங்கக பூச்சி நோய மேலாண்மை, அங்கக உர நிர்வாகம் மற்றும் அங்ககச் சான்றிதழ், அங்கக இடு பொருட்கள் தயாரிப்பு, அங்கக விளைபொருள்களை சந்தைப்படுத்துதல் ஆகிய தலைப்புகளில் சொற்பொழிவோடு கூடிய செயல் விளக்கங்களும் நடைபெறும்.

இந்த பயிற்சிக்கான கட்டணம் ஜிஎஸ்டி உட்பட ரூபாய் 750 ஆகும். விருப்பமுள்ள விவசாயிகள் 9486734404 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். நேரடியாகவும் வந்து பதிவு செய்து இந்த பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என்று நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் கேட்டுக் கொண்டனர்.