தன்னாட்சி கல்லூரி தரவரிசைப் பட்டியலில் என்.ஜி.பி. கலை கல்லூரி கோவையில் முதலிடம்

இந்தியாவின் தலைசிறந்த 500 கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் கல்விச் சிறப்பின் பல முக்கியமான அளவுகளில் மதிப்பீடு செய்து, ‘எடுகேஷன் வேர்ல்டு’ என்ற பத்திரிகை தரவரிசைப் படுத்துகிறது. அந்த வகையில் கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில் இயங்கி வரும் டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தன்னாட்சி கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் அகில இந்திய அளவில் பத்தாவது இடத்தையும், தமிழக அளவில் ஐந்தாவது இடத்தையும், கோவை மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பெற்று இருக்கிறது.

இத்தகவலை டாக்டர் என்.ஜி.பி. கல்வி குழுமங்களின் செயலர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி பெருமையுடன் தெரிவித்துள்ளார். மேலும், கல்லூரியின் முன்னேற்றத்திற்கு காரணமாக திகழ்ந்த கல்லூரி முதல்வர், புல முதன்மையர்கள், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர், துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோருக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி, முதன்மை செயலர் அலுவலர் ஓ.டி.புவனேஸ்வரன் ஆகியோர் நன்றிகளையும், வாழ்த்தினையும் தெரிவித்தனர்.