இந்திய ஹோமியோபதி மருத்துவ சங்கத்தின் தேசிய அளவிலான மாநாடு

கோவையில் இந்திய ஹோமியோபதி மருத்துவ சங்கத்தின் தேசிய அளவிலான மாநாடு ஞாயிற்றுக்கிழமை நவஇந்திய பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை கல்லூரியில் நடைபெற்றது. கோவையில் முதன் முறையாக நடைபெற்ற மாநாட்டை சங்கத்தின் நிர்வாகிகளான மருத்துவர்கள் தினேஷ் சாமுவேல், பார்த்திபன், அருணா பிரியா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். தேசிய அளவில் நடைபெற்ற இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில், கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் சுகாசினி, இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் தலைவர் சரஸ்வதி கண்ணையன், அம்பிகா காட்டன் மில் வித்யா ஜோதிஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மாநாட்டில் புற்று நோய் மற்றும் ஹோமியோபதி சிகிச்சை குறித்து மருத்துவர்கள் ரவி மற்றும் பிஜூ ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

மேலும், மாநாட்டில் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையில் ஓமியோபதி மருத்துவத்தின் பயன்கள் குறித்தும், குறிப்பாக புற்று நோய் சிகிச்சையில் ஓமியோபதி மருத்துவத்தின் அணுகுமுறைகள் மற்றும் அதன் பயன்கள் குறித்தும் ஓமியோபதி மருத்துவர்கள் பேசினர்.