நேரு மேலாண்மை கல்லூரியில்  பட்டமளிப்பு விழா

நேரு மேலாண்மை கல்லூரி சார்பில் எம்பிஏ மற்றும் எம்சிஏ மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ் விழாவில் சென்னை பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் மனிதவள மேலாண்மைப் பிரிவு துணைத் தலைவர் சியாம் சுந்தர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.  விழாவிற்கு தலைமை வகித்து, நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான முனைவர் பி.கிருஷ்ணகுமார் பேசியபோது,  சமூக முன்னேற்றத்தில் கல்வி முக்கியப் பங்காற்றி வருகிறது. மேலும், சமூக மாற்றத்துக்கு கல்விதான் வித்திடுகிறது. பட்டம் பெறும் இந் நாள் அனைத்து மாணவ மாணவியருக்கு இனிய நாளாக அமையும் என எதிர்பார்க்கிறேன். மேலும், நேர்மையான சிந்தனைகள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுவும் வாழ்க்கை சிறப்பாக அமைய உதவும் என்றார்.பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர் சியாம் சுந்தர் பேசும் போது,  உயர்கல்விக்கான பட்டத்தை பெற்ற உங்களை நினைத்து பெற்றோர் பெருமை அடைவர். உங்களின் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். சமூகத்தை எதிர்கொண்டு சமாளிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் எத்தகைய தொழில்நுட்பங்கள் மனித சமூகம் கையாளும் என்பது யாருக்கும் தற்போதைக்கு தெரியாது. அதனால் எத்தகைய சவாலுக்கு தயாராக இன்றைய சமூகம் இருக்க வேண்டும் என கூறினார். இவ் விழாவில் மொத்தம் 128 மாணவ மாணவியர் பட்டங்களை பெற்றனர். இவ் விழாவில் கல்லூரி டீன் டி.பி.பென், துறைத் தலைவர் அலெக்ஸ் ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.