கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 530 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கோவை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. கோவையில் திருச்சி சாலை, அவினாசி சாலை, காந்திபுர, சூலூர், உள்ளிட்ட மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 530 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது. குறிப்பாக அதிகபட்சமாக சின்னகல்லாறு பகுதியில் 170 மில்லி மீட்டர் மழையும், குறைந்த பட்சமாக பீளமேடு பகுதியில் 1 மில்லி மீட்டர் மழையளவும் பதிவாகி உள்ளது. மேலும் சிறுவாணி அணையின், மொத்த கொள்ளளவான 49.53 அடியில் , தற்போது  47.82 அடி உள்ளது. மழை தொடர்ந்தாள் இந்த வருடம் மீண்டும் சிறுவாணி அணை நிரம்ப வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மழையின் காரணமாக கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால்  கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தொடர்ந்து தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டு உள்ளது.