பிரதமரின் சுதந்திர தின உரை: கூகுள், யுடியூபில் நேரடி ஒளிபரப்பு

பிரதமரின் சுதந்திர தின உரை கூகுள் மற்றும் யுடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று டில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இந்த உரையை தூர்தர்ஷன் ஒளிபரப்பு செய்யும்.

இந்நிலையில், இந்த உரையை அதிக மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக கூகுள் மற்றும் யுடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்த ஒளிபரப்பு கூகுளின் முகப்பு பக்கத்தில் இடம்பெறும். இதற்கு முன்னர், அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்பு விழாவை கூகுள் நேரடியாக ஒளிபரப்பு செய்தது.