கே.ஐ.டி கல்லூரியில் இன்னோவேஷன் ஹாப் துவக்க விழா

கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள கே.ஐ.டி – கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறையின் சார்பாக “5G ANTENNA INNOVATION HUB”- ன் துவக்க விழா கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் டீன் ராமசாமி (கல்வி மற்றும் ஆராய்ச்சி) வரவேற்புரை வழங்கினார்.

இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக அன்சிஸ் – அகடாமிக் ப்ரோக்ராம் மேனேஜர் (Academic Program Manager – ANSYS) பிரசன்ன ஷங்கர் கலந்து கொண்டார். நிகழ்வில் அவர் பேசுகையில், இம்மையத்தின் மூலம் ஆண்டெனா வடிவமைப்பு, சிக்கலான RF மின்னணு சுற்றுகளின் வடிவமைப்பு, செயற்கைக்கோள் தொடர்பு, மொபைல் தொடர்பு மற்றும் உயிரியல் மருத்துவத்தின் பயன்பாடுகள் பற்றி மாணவ மாணவிகள் அறிந்து கொண்டு தங்கள் திறமைகளை வளர்த்து கொள்ளலாம் என்று கூறினார்.

மேலும், மாணவ மாணவிகளுக்கு ANSYS in Academic Program மற்றும் ANSYS Certification Program in association with IIT Madras போன்ற தலைப்புகளில் சொற்பொழிவு வழங்கப்பட்டது.

கல்லூரி துணைத் தலைவர் இந்து முருகேசன், கல்லூரி முதல்வர் மோகன்தாஸ் காந்தி, கல்லூரி துணை முதல்வர் ரமேஷ், அனைத்து துறைத்தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.