கொ.ம.தே.க – கே.எம்.சி.ஹெச் சார்பாக இலவச மருத்துவ முகாம்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் கே.எம்.சி.ஹெச் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் கோவை மாநகராட்சி 18 வது வார்டில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த பொது மருத்துவ முகாம் 18 வது வார்டுக்குப்பட்ட கவுண்டம்பாளையம், ராமசாமி நகர், மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. இதனை மேயர் கல்பனா தொடங்கி வைத்தார்.

முகாமில் வடக்கு மண்டலத் தலைவர் கதிர்வேல், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சங்கனூர் பிரேம், கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், வார்டு செயலாளர் ஜெயச்சந்திரன் மற்றும் சுபாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.