நலிவடைந்த குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய பாஷ் மற்றும் ஏகம் அறக்கட்டளை

கொரோனா முதல் மற்றும் இரண்டவது அலையின் போது எற்பட்ட பாதிப்புகளில் பலர் வேலை இழந்தனர். அதன் விளைவாக பல்வேறு வகையான தொழில்கள் சறிவடைந்து அவர்களுடைய வாழ்வாதாராம் பாதிக்கபட்டது.

இதனை கருத்தில் கொண்டு பாஷ் (BOSCH) மற்றும் ஏகம் அறக்கட்டளை (NGO) இணைந்து வேலை வாய்பிழந்தோர், சரிவடைந்த சிறு தொழில் மற்றும் நலிவடைந்த 100 குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு தொழிற்பயிற்சி, புதிய சிறு தொழில் தொடங்குவதிற்கான உபகரணங்கள் மற்றும் மூலபொருட்க்கள் வழங்கப்பட்டது.

மேலும் அவர்களின் தொழில் முன்னேற்றம் அடைவதற்க்கு தேவையான வழிகாட்டுதல்கள், உதவிகள்  வழங்கப்படுகின்றன. முதற்கட்டமாக 20 குடும்பங்களுக்கு பாஷ் (BOSCH) நிறுவனம் சமூகப் பொறுப்பு நடவடிக்கைகள் (CSR) மூலமாக சலூன் கடை, இஸ்திரி கடை, பெட்டிக்கடை, தையல் இயந்திரம் ஆகியவற்றை பயனாளிகளுக்கு வழங்கினார்.