அமிர்தா விஸ்வ வித்யாபீடம், சிஎம்ஏ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

அமிர்தா விஸ்வ வித்யாபீடம் வணிகவியல் கல்லூரி, கோயம்புத்தூர் மேலாண்மை சங்கத்துடன், கற்பித்தல், பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் இணைந்து செயல்பட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

இதுகுறித்து கோயம்புத்தூர், அமிர்தா வணிகவியல் கல்லூரி டீன் டாக்டர் கிஷோர் பிள்ளை கூறுகையில், பல்வேறு வகையான சேவை, உற்பத்தி தொழில் நிறுவனங்களைச் சார்ந்த அதிக அளவில் உறுப்பினர்களாக உள்ள கோயம்புத்தூர் மேலாண்மை சங்கம் போன்ற அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

அமிர்தா மேலாண்மை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், இந்த சங்கம் நடத்தும் பல்வேறு சிறப்பு கருத்துரைகளை கேட்டு, அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். மேலும் மேலாண்மை துறையில் இந்த மாணவர்கள், ஆராய்ச்சி மற்றும் வழிகாட்டுதல்களை பெறவும் வாய்ப்பாக அமையும். அமிர்தா மேலாண்மை கல்வி நிறுவனம், செயல் மேம்பாடு மற்றும் மேலாண்மை மேம்பாட்டு திட்டங்களை, தொழில்துறை நிபுணர்கள் மற்றும் எங்களது கல்வியாளர்களைக் கொண்டு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. சிஎம்ஏ விற்கு தேவையான ஆலோசன சேவைகளை வழங்கவும் தயாராக உள்ளோம்,” என்றார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், அமிர்தா விஸ்வ வித்யா பீடத்தின் நிறுவனங்கள் மற்றும் தொழில் தொடர்பு முதுநிலை இயக்குனர் பரமசிவம், வணிக கல்லூரியின் முதல்வர் ஷியாம், சிஎம்ஏ தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரா பம்ப்ஸ் ஜெயக்குமார் ராம்தாஸ் மற்றும் சிஎம்ஏ செயலாளர், அமெக்ஸ் அல்லாய்ஸ் செயல் இயக்குனர் நித்யானந்தன் தேவராஜ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்ச்சியில், அமிர்தா விஸ்வ வித்யா பீடம் வணிக கல்லூரி டீன் டாக்டர் கிஷோர் பிள்ளை, நிறுவனங்கள் மற்றும் தொழில் தொடர்பு துறை இணை இயக்குனர் பாலச்சந்திரன், சிஎம்ஏ இணை செயலாளர் மற்றும் துணைத்தலைவர் பிரசாத் நாயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.