புதுமைப்பித்தன் பிறந்தநாள்

நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி புதுமைப்பித்தன் 1906 ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் சொ.விருத்தாசலம். இவர் எழுத்துப்பணியில் 15 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருந்தார். ஆனால், அதற்குள் 100க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 100க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், எண்ணற்ற மொழிப்பெயர்ப்புகள், புத்தக விமர்சனங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.

இவரின் அற்புதமான படைப்புகளான காஞ்சனை, நாசகாரக் கும்பல், மனித யந்திரம், பொன்ன கரம், இது மிஷின் யுகம், சாபவிமோசனம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், ஒரு நாள் கழிந்தது, சிற்பியின் நரகம், செல்லம்மாள் போன்றவை. இவர் சொ.வி., ரசமட்டம், மாத்ரு, கூத்தன், நந்தன், கபாலி, சுக்ராச்சாரி, இரவல் விசிறிமடிப்பு ஆகிய புனைப் பெயர்களில் கதைகளை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த புதுமைப்பித்தன் தனது 42வது வயதில் மறைந்தார்