ஜெ.ஆர்.டி நிறுவனருக்கு “வாழ்நாள் சாதனையாளர்” விருது

அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் ஜார்கண்ட் மாநில ஐகோர்ட்டில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி எம்.கற்பகவிநாயகம் எழுதிய ‘மனிதநேயத்தின் அடிப்படையில் தீர்ப்புகள்’ என்ற தலைப்பில் 4ம் பாகம் புத்தகம் வெளியீட்டு விழா, வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் மற்றும் சிறந்த சேவைக்கான விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கோவை ஜெ.ஆர்.டி ரியல்டர்ஸின் நிறுவனர் டாக்டர் ஜெ.ராஜேந்திரனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் சிறந்த பிரமோட்டர்ஸ்’ விருதுகள் வழங்கப்பட்டது. சென்னை ஐகோர்ட் நீதிபதி டி.ராஜா, புதுச்சேரி மாநில நுகர்வோர் குறை தீர்ப்பாயம் நீதிபதி கே.வெங்கட்ராமன் மற்றும் நிர்வாகிகள் எம்.ஜெயராமன், வக்கீல் சுந்தர வடிவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில், ஓய்வு பெற்ற நீதிபதி எம்.கற்பகவிநாயகம் பேசுகையில், வக்கீலாக இருப்பதை விட நீதிபதியாக இருந்து நல்ல பெயரை சம்பாதிப்பதில்தான் மகிழ்ச்சி இருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். வாழ்க்கையில் உழைத்தால் நாம், எதிர்பார்ப்பதை விட அதிகம் கிடைக்கும் என்பதை எடுத்துக் காட்டியவர். உழைப்பு மட்டுமே ஒரு மனிதனை உயர்ந்த மனிதனாக்கும். நாம் சாதிக்காக பிறந்தவர்கள் அல்ல. சாதிக்க பிறந்தவர்கள் என்று கூறினார்.