கோவையில் ஜெயின் சாதுக்கள் பங்கேற்ற ஒரு நாள் சிறப்பு தியானம்

ஸ்ரீ கோயம்புத்தூர் ஸ்தனக்வாசி ஜெயின் சங்கத்தின் சார்பில் கோவை நேரு வித்யாலயா பள்ளியில் ஜெயின் சாதுக்கள் பங்கேற்ற ஒருநாள் தியான விழா நிகழ்ச்சி நடந்தது. இதில் சாதுக்கள் ஸ்ரீ குமதலாட்ஜி மகாராசா, ஸ்ரீ மஹாப்ரஞ்ஜி, ஸ்ரீ படம்கிர்டிஜி, ராஜ்கிரடிஜி மகாராசா ஆகியோர் பங்கேற்றனர்.

கொரோனா முழுமையாக நீங்கவும், மனிதநேயம் வளர்ச்சியடையவும், உடல் நலன் மேம்படவும், உறவுகள் மேம்படவும், அமைதிக்காகவும் 10008 முறை மந்திரம் உச்சரிக்கும் நிகழ்ச்சி தொடர்ந்து 24 மணி நேரம் நடைபெற்றது.

தியான நிகழ்ச்சிக்குப் பிறகு சாதுக்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாவங்கள் அதிகமானதாலும், இயற்கையை நேசிக்காமல் இருப்பதாலும், விலங்கினங்களை துன்புறுத்துவதாலும், பல்வேறு எதிர்மறையான நிகழ்வுகள் நடக்கின்றன. எனவே மக்கள் அனைத்து உயிர்களையும், இயற்கையையும் நேசிக்க வேண்டும் என்றனர்.

நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் நலச்சங்க தலைவர் ரமேஷ் பாப்னா சி, ஜெயின் சங்கத்திற்கு நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஸ்ரீ கோயம்புத்தூர் ஸ்தனக்வாசி ஜெயின் சங்கத்தின் தலைவர் ஸ்ரீ பால் சந்த் கங்காரியா, செயலாளர் தன்ராஜ் சோர்டியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.