கொங்குநாடு கல்லூரியில் 75 வது சுதந்திர தின விழா

இந்திய நாட்டின் 75 வது சுதந்திர தின விழா கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (15.08.2021) கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் கோவை குளோபல் ஆர்த்தோ மருத்துவமனையின் மருத்துவரும் கோவிட் போர் தளபதியுமான மருத்துவர் எஸ். கார்த்திக் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

அவர் தம் உரையில், “விடுதலை போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்றும் வீரமங்கை வேலுநாச்சியார், குயிலி ஆகியோர் ஆங்கிலேயரை எதிர்த்து தம் வீரத்தை வெளிப்படுத்தியதை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து போற்ற வேண்டும் என்றும் கூறினார்.

நாட்டிற்காக நல்ல குழந்தையை பெற்றெடுக்க தன் உயிரையும் கொடுத்தவர் கமலாதேவி என்ற தமிழ் அரசி அவர் பெற்றெடுத்த கோச்செங்கணான் என்ற அரசன் தன் செயற்கரிய செயல்களால் இன்றும் நம் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றும், ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டு பிடிப்பதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே விமானத்தை வடிவமைத்து அதனை வெற்றிகரமாக 1500 மீட்டர் வானில் பறக்க வைத்தவர்கள் இந்தியர்கள் என்று குறிப்பிட்ட அவர், இந்த உண்மைகளை உலகிற்கு உரக்கச் சொல்ல வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இவ்விழாவில் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குனர் டாக்டர் சி. ஏ. வாசுகி கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையத்தை ஒருங்கிணைந்த அஜித் கோஸ், கோகுல் மற்றும் செவிலியர்களுக்கு
கல்லூரி மேலாண்மை குழுவின் பொருளாளர் மருத்துவர் பரமசிவன் அவர்கள் நினைவுப் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவியர் கொரோனா பெருந்தொற்று குறித்த விழிப்புணர்வை மையமாக வைத்து மௌன நாடகம் நிகழ்த்தினர். விழாவின் நிறைவில் கல்லூரி முதல்வர் லச்சுமணசாமி நன்றி உரை ஆற்றினார். இவ்விழாவில் பேராசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.