ராமகிருஷ்ணா கலை கல்லூரியில் சுதந்திர தின கொண்டாட்டம்

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் கீழ், கோவை நவஇந்தியாவில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தினவிழா இன்று (15.08.2021) வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணாகலை அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமைவகித்தார். தொழில்நுட்பக்கல்விக்கான இந்திய அமைப்பின் தமிழகப் பிரிவின் தலைவர் டாக்டர் ஏ. சங்கரசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தேசியக்கொடி ஏற்றி சுதந்திரதினவிழா உரையாற்றினார். இந்நிகழ்வில் தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள்கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள கலை அறிவியல்கல்லூரிகளில் முதல்முறையாக ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் மேலாண்மைத் துறையில், அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பக்கல்விக்கான இந்திய (ISTE) அமைப்பின் மாணவர் கிளை தொடக்க விழா நடைபெற்றது.

விழாவில் தொழில் நுட்பக்கல்விக்கான இந்திய அமைப்பின் தமிழகப் பிரிவின் தலைவர் டாக்டர் ஏ. சங்கரசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றிவைத்து சிறப்புரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் மேலாண்மைத் துறையில் ஐ.எஸ்டி.இ. (ISTE) மாணவர் கிளை தொடங்குவதற்கான அங்கீகாரச் சான்றிதழை, கல்லூரி செயலர் மற்றும் முதல்வர் முனைவர் பி.எல். சிவக்குமார் அவர்களிடம் வழங்கினார்.