“தமிழில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்வி அறிமுகம்”

தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்காக, தமிழில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்வி அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கலின் போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (14.08.2021) தெரிவித்துள்ளார்.

வேளாண் பட்ஜெட்டில் இதுகுறித்து குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சம்:

கிருஷ்ணகிரியில் தோட்டக்கலை கல்லூரி புதிதாக தொடங்குவதற்கு முதற்கட்ட நிதியாக ரூ.10 கோடி ஒதுக்கீடு.

தமிழ் வழியில் பயிலும் மாணவர்களின் வசதிக்காக தமிழில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்வி அறிமுகம்.

திருச்சி- நாகை மாவட்டத்திற்கு இடையேயான பகுதி வேளாண் தொழிற்சாலைகளுக்கான பெருந்தடமாக (Agro Industrial Corridor) அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கூறிய அமைச்சர், கடைசியாக, “வாழ்க தமிழகம், வளர்க வேளாண்மை” என்று கூறி வேளாண் நிதிநிலை அறிக்கை உரையை முடித்தார்.