கொரோனாவிலிருந்து குணமைடந்த பின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

கொரோனாவின் இரண்டாம் அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், தற்போது தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சிறிது குறைந்து கொண்டே வருவது அனைவருக்கும் ஆறுதல் தரும் செய்தி. தொற்றிலிருந்து மீண்டு குணமடைந்து வீடு திரும்புவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள், வீடு திரும்பியதும் குணமாகிவிட்டதே என சாதாரணமாக இருந்துவிடக்கூடாது. வீட்டிற்கு சென்றதும் தனி அறையில் நன்கு ஓய்வு எடுத்து ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுதல் அவசியம்.

குணமடைந்து விட்டோம் என அன்றாடம் செய்யும் வழக்கமான வேலைகளில் ஈடுபடக்கூடாது. உடலுக்கு அதிக பணி மற்றும் சோர்வை தராமல் தனி அறையில் ஓய்வு எடுப்பது அவசியம். கொரோனாவிலிருந்து குணமடைந்திருந்தாலும் நோயின் தாக்கம் உடலில் இருக்கும். முழுமையாக குணமடையும் வரை தனி அறையில் ஓய்வு எடுப்பது முக்கியம்.

இதிலிருந்து குணமானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். எனவே ப்ரோட்டீன் நிறைந்த உணவுகள், காய்கறி, கீரை,பழங்கள் முட்டை, நட்ஸ், சத்தான அசைவ உணவு என ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடுங்கள்.

கடுமையாக உடற்பயிற்சிகளை செய்யமால் எளிமையான பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். இதனால் உடலின் உள் உறுப்புகள் தடையின்றி இயங்கும். உடற்பயிற்சியை தினசரி பழக்கமாக வைத்து கொள்ளுங்கள்.

சுவாசப்பாதையில் அடைப்பு இல்லாமல் இருக்க, நன்றாக மூச்சுவிட ஆவிப்பிடிப்பது நல்லது.
மூளைக்கு பயிற்சி அளிக்கக் கூடிய விளையாட்டுகளை விளையாடுங்கள். உங்களுக்கு நடந்த பழைய நினைவுகளை அசைபோட்டு பாருங்கள்.

கொரோனாவில் இருந்து குணமான சிலருக்கு வேறு சில அறிகுறிகள் தென்படுகிறது. குறிப்பாக பூஞ்சை நோய்கள், இதய பாதிப்பு , பக்கவாதம் போன்ற நோய்கள் உருவாவதால் மற்ற ஏதேனும் அறிகுறிகளை கவனித்தால் மருத்துவரை உடனே அணுவது நல்லது.

 

Source: News 18 Tamilnadu