“மாணிக்கவாசகரின் திருஅம்மானை” இணைய வழி கருத்தரங்கம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் தமிழ்த் துறை சார்பில் “மாணிக்கவாசகரின் திருஅம்மானை வாழ்வும் வாக்கும்” எனும் தலைப்பில்  இணைய வழி கருத்தரங்கம்  இன்று (21/04/2021)  நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு கல்லூரியின் முதல்வர் பாலுசாமி  தலைமை தாங்கினார்.

 சிறப்பு விருந்தினராக, ஈரோடு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் யுவராஜ்  கலந்து கொண்டு  தனது உரையில் கூறியதாவது:  நால்வர் பெருமக்கள் எனப் போற்றப்படுபவர்களுள் ஒருவராக விளங்கும் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் திரு அம்மானையின் சிறப்புகள் குறித்தும், மகளிர் விளையாடும் பண்டைக்கால விளையாட்டாகிய அம்மானையினை விளக்கி, இவ்விளையாட்டினால் கவிதை புனையும் அறிவுப்பூர்வமான ஆற்றலையும் பெண்களின் அறிவுத்திறனையும் எடுத்துக்கூறினார்.

 மேலும், இறைவனின் திருவருளைப் பெறுவதற்காக பெண்கள் ஒன்று கூடிபாடுவர். அவ்வாறு பாடும்போது தத்தம் முறைவரும் போது ஒவ்வொரு கருத்தைப் பாடலாகப் பாடி ஆடும் முறையாக அமைந்திருப்பதை விளக்கினார்.

 இதில் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.