ஸ்புட்னிக் தடுப்பூசி பயனளிக்குமா?

கொரோனாவிற்கான தடுப்பூசியாக கோவிஷில்ட் மற்றும் கோவாக்ஸின் ஆகிய இரு தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள நிலையில், தற்போது தொற்று வேகமெடுத்துள்ளதால் மருத்துவ நிபுணர் குழு ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பரிந்துரைத்துள்ளது. இதனால் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியாவிலும் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

இத்தடுப்பூசி  கொரோனவிற்க்காக முதன் முதலில் தயாரிக்கப்பட்டது. எனினும் இந்த தடுப்பூசி குறித்து பல சர்ச்சைகள் எழுந்தன. 3 கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு 92 % ஆற்றலுடன் இந்த ஊசி செயல்படும் என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ள ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தற்போது இந்தியாவும் அனுமதித்துள்ளது.மேலும் இந்த தடுப்பூசியை இந்தியாவின் மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ், 10 கோடி டோஸ் எண்ணிக்கையில் மருந்து சப்ளை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

அறிந்து கொள்வோம் ஸ்புட்னிக் வி தடுப்பூசி பற்றி:

2 கட்ட டோஸ்களை கொண்ட ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தை, முதல் டோஸ் செலுத்திய 28 நாட்களுக்கு பிறகு இரண்டாவது டோஸ் செலுத்த வேண்டும்.

கொரோனாவிற்கு எதிராக 91.5% எதிர்ப்பு ஆற்றலுடன் செயல்படக்கூடிய இம்மருந்து, மாடர்னா மற்றும் பைஸர் தடுப்பூசிக்கு பிறகு கொரோனவை கட்டுப்படுத்துவதில் சிறந்த பலனை தருவதாகவும் 0.1 % பக்க விளைவுகளை உடையதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இத்தடுப்பூசியை பயன்படுத்தும் 60 வது நாடாக இந்தியா உள்ளது. இலங்கை, எகிப்து, பக்ரைன், வியட்நாம் போன்ற நாடுகளிலும் இம்மருந்து பயன்பாட்டில் உள்ளது.

மேலும் ஸ்புட்னிக் தடுப்பூசி ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாதத்தில் பொது மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.