வானதி சீனிவாசனை ஆதரித்து நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா பந்தய சாலை பகுதியில் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வானதி சீனிவாசனை ஆதரித்து பாஜகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் கர்நாடக மாநிலம், பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா இன்று காலை கோவை பந்தய சாலை பகுதியில் பாஜக தொண்டர்களுடன் நடந்து சென்று வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கு நடைபயிற்சி மேற்கொண்ட சிலர் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.