பெண்களின் உரிமையை காக்கும் கட்சி பாஜக – வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன்,   காந்திபுரம் பா.ஜ.க தேர்தல் அலுவலகத்தில்   இன்று (1.4.2021)செய்தியாளர்களை  சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

வெற்றியோ தோல்வியோ மக்கள் கொடுப்பதை ஏற்றுக்கொண்டு சேவை செய்வதுதான் அரசியல். அப் பக்குவம் இன்னும் கமலஹாசன் அவர்களுக்கு வரவில்லை எனவும்   அதற்கு அவர் நீண்ட பயிற்சி எடுக்க வேண்டும் என்றும்கூறினார் .

பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற போலி பிரசாரத்தின் மூலம் தமிழக மக்கள் மனதில் பதற்றத்தை ஏற்படுத்த திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் முயற்சிக்கின்றன.  அனைத்து தரப்பு மக்களுக்கான அரசாக பா.ஜ.க இருந்து வருகிறது.

பா.ஜ.க ஆட்சியில் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுவது அந்த சமூகத்தினராலேயே மறுகப்பட்டுள்ளது   என்றும்,   அச்சமூகத்தை சேர்ந்த பெண்களே அதை உணர்ந்து பாஜக விற்கு ஆதரவாக இருக்கின்றனர் என்றும் கூறினார்.

பெண்களை   இழிவாக பேசும் திமுக தனது கட்சியினரை கண்டிப்பதில்லை. பெண்களை மதித்து அவர்களுக்கான உரிமையை காக்கும் கட்சியாக பாஜக இருந்திருக்கிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள பல பிரச்சனைகளை தீர்க நான் பாடுபட்டுள்ளேன் அதனால் வென்றாலும், தோற்றாலும் மக்களுடன் களத்தில் இருப்பேன். என்றார்.