காதலர் தினம் உருவானது எப்படி?

பிப்ரவரி மாதம் என்றாலே இளசுகளின் நினைவுக்கு வருவது காதலர் தினம் தான்.  நம் அன்பை  வெளிப்படுத்த இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாளாக உள்ளது.  மேலை நாடுகளில் காதலர் தினதன்று  எல்லா வித உறவுகளிடமும் அன்பை பரிமாறி கொள்கின்றனர். ஆனால் இந்தியாவில் காதலர்கள் மட்டுமே கொண்டாடடும் நாளாக பார்க்கப்படுகிறது.

காதலை கொண்டாடவும், வெளிப்படுத்தவும் தனியே ஒரு தினம் தேவை தானா என்றால் நாம் ஓடி கொண்டிருக்கும் இந்த பரபரப்பான நாட்களில்  நாம் கொண்ட அன்பை வெளிப்படுத்த தனி ஒரு நாள் தேவைதான் படுகிறது.

நீண்ட நாள் நம்முள் இருக்கும் அன்பை பிறரிடம் வெளிப்படுத்தியும், இரு உள்ளங்கள் கொண்டாடடிம் மகிழும் இந்த நாள் எப்படி உருவானது? இதற்கு எப்படி வேலண்டைன்ஸ் டே (காதலர் தினம்) என்ற பெயர் வந்தது? இத்தினம் கொண்டாட காரணம் என்ன? என்று நாம்  ஆராய்ந்த போது  2 ஆம்  நூற்றாண்டில் நடைபெற்ற  ஒரு நிகழ்வினை தான் பெரும்பாலான இணையதள தேடல்கள்  நமக்கு அளிக்கின்றன. அது என்ன நிகழ்வு என்பதை நாம் காண்போம்.

கிபி 270 இல் ரோம் நகரை ஆண்ட கிளாடியஸ் என்ற மன்னர் திருமணம் செய்து கொண்டால் ஆண்களின் வீரம் குறைந்து விடுவதாகவும், வீரம் குறைந்தால் போர் புரிய முடியாது என்ற காரணத்தினால் ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்ட திருமணங்ககளுக்கும் தடை விதித்தார்.

ஆனால் ஏற்கனவே காதல் வயப்பட்டு இருந்த ஆண்கள் தங்கள் காதலை பிரிய தயங்கினர். மேலும்  நீண்ட காலம் திருமணம் செய்யாமல் இருந்தவர்களும் காதலிக்கத் தொடங்கினர்.  காதலர்களை சேர்த்து வைக்க பாதிரியார் வாலண்டைன் அரச அறிவிப்பை மீறி காதலர்களுக்கு ரகசிய திருமணங்களை நடத்தி வைத்தார். ஆனால் ஈச்செய்தியை அறிந்த மன்னன் மரணதண்டனை விதித்து பாதிரியாரை சிறையில் அடைத்தான்.

இதனிடையே சிறை காவலரின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் வாலண்டைன்  க்கும் இடையே காதல் வெளிப்பட்டது. சிறை காவலருக்கு இந்த விஷயம் தெரிய அஸ்டோரியஸை வீட்டுக்காவலில் வைத்தார். தனது காதலிக்கு முதல்  வாழ்த்து அட்டையின் மூலம் செய்தியினை  பரிமாறியுள்ளார்.அதே  நாளில் (பிப்ரவரி 14) வாலண்டைன்  கல்லால் அடிக்கப்பட்டு  தலை துண்டிக்கப்பட்டு சாகடிக்கப்பட்டார்.

1537 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசர் ஹென்றி பிப்ரவரி 14 யை காதலர் தினமாக கொண்டாட வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அன்றிலிருந்து இன்றுவரை இந்த தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

Story by : Ramya