ஒன்பிளஸ் அறிமுகம் செய்தது ‘சைபர்பங்க் 2077’ எடிஷன் மொபைல்

ஒன்பிளஸ் தனது புதிய லிமிடெட் எடிஷன் மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. அது ‘ஒன்பிளஸ் 8டி சைபர்பங்க் 2077’ இந்த எடிஷன் ஆனது மஞ்சள் மற்றும் சாம்பல் வண்ண மாறுபாட்டில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த வரையறுக்கப்பட்ட எடிஷனுக்காக ஒன்பிளஸ் நிறுவன கேம் டெவலப்பர் சிடி ப்ராஜெக்டுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

‘சைபர்பங்க் 2077’ என்பது ஆக்ஷன் ரோல்-பிளமிங் வீடியோ கேம் ஆகும். இந்த புதிய ஒன்பிளஸ் 8டி சைபர்பங்க் 2077 எடிஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா இல்லையா என்பதில் தெளிவு இல்லை. இந்த புதிய ஒன்பிளஸ் 8 டி சைபர்பங்க் 2077 லிமிடெட் எடிஷன் வடிவமைப்பு மாற்றங்களைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.