இந்துஸ்தான் ஆர்க்கிடெக்சர் கல்லூரிக்கு தேசிய விருது

கோவை, இந்துஸ்தான் ஆர்க்கிடெக்சர் கல்லூரி தேசிய அளவில் மிகச்சிறந்த கல்லூரிக்கான விருதினை பெற்றுள்ளது.

கோவை, பொள்ளாச்சி சாலை, ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள இந்துஸ்தான் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் கல்லூரி கடந்த 2015ம் வருடம் முதல் இயங்கி வருகின்றது. இக்கல்லூரியில் தற்போது 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த 27.11.2020 அன்று பெங்களூரில் உள்ள தாஜ் வெஸ்ட் எண்டு ஓட்டலில், “பிகின் தொடக்க ஆராய்ச்சி நுண்ணறிவு தனியார் லிமிடெட்” சார்பாக தேசிய அளவில் சிறந்த ஆர்க்கிடெக்சர் கல்லூரிக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விருதிற்கு இந்தியா முழுவதிலிருந்து 100க்கும் மேற்பட்ட ஆர்க்கிடெக்சர் கல்லூரிகள் கலந்து கொண்டன. இதில் கோவை, இந்துஸ்தான் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் கல்லூரி “கல்லூரியின் மிகச்சிறந்த தரம் மற்றும் கல்லூரியின் மிகச்சிறந்த கட்டமைப்பு” என்ற பிரிவில் இந்திய அளவில், தமிழகத்தில் மிகச்சிறந்த கல்லூரிக்கான விருதினைப் பெற்றுள்ளது.

தமிழகத்திலேயே மிகச்சிறந்த கல்லூரிக்கான விருதினை இந்துஸ்தான் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் கல்லூரி பெற்றமைக்காக அக்கல்லூரியின் இயக்குனர் சுரேஷ்பாஸ்கர் மற்றும் பேராசிரியர்கள், ஊழியர்கள் அனைவரையும் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதிகண்ணையன், செயலர் பிரியாசதீஸ்பிரபு வாழ்த்தினர். மேலும், கல்லூரியின் முதல்வர் நடராஜன், அனைத்து துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்களை இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் முதன்மை கல்வி அதிகாரி கருணாகரன் வாழ்த்தினர்.