ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ‘புதிதாய் பிறந்தோம்’ சிறப்புச் சொற்பொழிவு

கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஞாயிறு அன்று ‘புதிதாய் பிறந்தோம்’ என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழி நிகழ்ச்சியை நடத்தியது.

இந்த நிகழ்வில் மகாகவி பாரதியாரின் சிறப்பையும் அவரின் கவிதைகளில் உள்ள தத்துவங்களைப் பற்றி பேச்சாளர்கள் மரபின் மைந்தன் முத்தையா மற்றும் பாரதி பாஸ்கர் இருவரும் நேயர்களுக்கு எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முத்தையா அவர்கள் பாரதியை பற்றி பேசும்போதெல்லாம் நாம் புதிதாய் பிறக்கிறோம் என்ற சிந்தனையை அழுத்தமாய் பதிவிட்டார்.

பாரதி பாஸ்கர் பேசுகையில், மனித அளவில் புதிதாய் பிறந்து நாம் வரும்பொழுது பெரிய கனவோடு முதல் படியை தைரியமாக எடுத்து வைக்க வேண்டும் எனவும், அவ்வாறு உறுதியாய் முதல் படியை எடுத்துவைத்தாலே போதும், அடுத்தடுத்த படிகளில் செல்லும் பலம் கிடைக்கும் என்றார். பெரிய கனவுகளை முன் வைத்து நாம் செல்லும்போது வரும் ஒவ்வொரு தோல்வியிலும் பாடம் உள்ளது, கற்றுக்கொள்வது அவசியம் என்றார்.

இந்த நிகழ்வு கோவை கிக்கானி பள்ளியின் கலையரங்கத்தில் போதுமான சமூக இடைவெளியோடு நடைபெற்றது. யுடியூப் வாயிலாக இந்த நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் இந்த சிறப்பு சொற்பொழிவை கண்டுகளித்தனர்.