கட்டணமின்றி உடற்பயிற்சி அளிக்கும் ஃபாலுன் தாஃபா

“யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்பதே தமிழர் பண்பாடு.

ஃபாலுன் தாஃபா என்பது சீனாவின் ஒரு தொன்மையான ஆன்மீக சாதனை முறையாகும். மனதையும் உடலையும் ஒருங்கே மேம்படுத்தும் இந்த சாதனையின் ஐந்து உடற்பயிற்சிகளும் கற்பதற்கு மிக எளிதானவை. இப்பயிற்சியின் மூலம் உடலின் சக்தி பெருமளவில் அதிகரிப்பதுடன் ஆழ்ந்த மன அமைதியும் கிட்டுகிறது. உடல் நலமும் மேம்படுகிறது.

வெளி உலகினால் அறியப்படாத இந்த தொன்மையான, ஆன்மீக சாதனையை மக்கள் அனைவரும் பயனடையும் வண்ணம் மாற்றியமைத்து லீ ஹோங்ஜு 1992 ஆம் வருடம் சீனாவில் பொதுமக்களிடையே அறிமுகப்படுத்தினார். தற்போது ஃபாலுன் தாஃபா, உலகம் முழுதும் பரவி, 115 க்கும் மேற்பட்ட நாடுகளில், 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஃபாலுன் தாஃபா வின் பயிற்சி முறை:

ஃபாலுன் தாஃபா மதச்சார்பற்ற பயிற்சி முறை. ஃபாலுன் தாஃபா சங்கம் வியாபார நோக்கமற்றது. நன்கொடை பெற்றுக் கொள்வதில்லை. அபார உடல் நலமுன்னேற்றம் மற்றும் சமூகத்தின் அறநெறியை மேம்படுத்துவதில் பங்களித்த காரணத்தால், ஃபாலுன் தாஃபா உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் விருதுகளை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்பயிற்சியை தனியார் நிறுவனங்கள்,அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலை கழகங்கள், காவல்துறை பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்திய நகரங்களில் உள்ள பொது பூங்காக்களில், புத்தககண்காட்சி மற்றும் திருவிழாக்களிலும் இந்த பயிற்சியை பல மக்களிடம் அறிமுகப்படுத்தி சாதனை படைத்து வருகிறது.

தற்பொழுது கோவையில் பல பகுதிகளில் இவர்கள் பயிற்சியளித்து வருவது குறிப்பிடத்தக்கது.