இயற்பியல், வேதியியலுக்கான தனி ஆய்வுக்கூட திறப்பு விழா

 

கல்லூரியில் இயற்பியல் மற்றும் வேதியியலுக்கான தனி ஆய்வுக்கூடம் திறப்பு விழா மற்றும் அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். கே.சி.டி மாணவர்களின் திட்ட வடிவங்கள் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டன.

கல்லூரியின் முதல்வர் ஆர்.எஸ்.குமார் வரவேற்புரையாற்றினார். இயற்பியல் மற்றும் வேதியியல் ஆய்வக வளாகத்தை, , பெங்களூரு நேஷனல் டிசைன் & ரிசர்ச் மன்ற இயக்குனர் டாக்டர் கே. ராமச்சந்திரா திறந்து வைத்தார். கே.சி.டி தலைவர் டாக்டர் பி கே கிருஷ்ணராஜ் வாணவராயர் கூறுகையில்: நவீன ஆய்வகங்கள் அமைப்பது மட்டுமின்றி அதை மாணவர்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதும் முக்கியம் என்றார். மாணவர்கள் தங்களின் வாழ்வில் சாதிக்க, வெற்றி பெற பல்வேறு சவால்களை ஏற்க வேண்டும் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் டாக்டர். ராமச்சந்திரா கூறுகையில்: கேசிடி-யின் வளர்ச்சிக்கு அதன் நவீன ஆய்வகங்கள் அதிகரிப்பது ஒரு முக்கிய காரணம்.மேலும், இதுபோன்ற நவீன ஆய்வகங்கள், பல கல்லூரிகளில் இல்லை என்று கூறினார். இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் எந்தவொரு பொறியியலுக்கும் முக்கியமானதாகும் என்றார். மாணவர்கள் தங்களின் அறிவை மேம்படுத்த கல்லூரியில் உள்ள ஆய்வகங்களை பயன்படுத்துமாறு கூறினார். அறிவியல் மற்றும் மனிதவியல் துறை தலைவர் பி.தேவகி நன்றியுரை வழங்கினார்.