மாவட்டத்திற்கு ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க பரிந்துரை

பிரதான் மந்திரி ஜன் கல்யாண் காரி யோஜனா திட்டத்தில் ஒவ்வொரு  மாவட்டத்தில் உள்ள ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க மத்திய அரசுடம் பரிந்துரை செய்ய கோவையில்  தீர்மானம் நிறைவேற்றபட்டது.

இந்தியாவில் வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு உயர்தர மருத்துவச் சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை வெளியிட்டார்.மேலும் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக அரசின் திட்டங்கள் குறித்து எடுத்து கூறும் விதமாக நாடு முழுவதும் பிரதான் மந்திரி ஜன் கல்யாண் காரி யோஜனா பிரிவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை புரூக் பீல்டு சாலையில் உள்ள தனியார் அரங்கில் பிரதான் மந்திரி ஜன் கல்யாண் காரி யோஜனா மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநிலப் பொது செயலாளர் ஜெயகணேஷ் தலைமையில் நடைபெற்ற இதில் மத்திய அரசின் கடந்த ஆறு மாத கால நலத்திட்டங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில செயலாளர் ஜெய்கணேஷ், இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் வரும் காலங்களில் ஒரு லட்சம் பேர் பயன்பெறும் வகையில் வேலை வாய்ப்புகள் உருவாக மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தார்.

கூட்டத்தில் தமிழக ஆலோசனை குழு தலைவர் திரு பிரபுல்ஜீ, மாநில செய்தி தொடர்பாளர் செந்தில் குமார், மாநில செயலாளர்கள் சிவக்குமார்,சண்முகவடிவேல்,புருஷோத்தமன் உள்ளிட்ட தமிழகம் முழுவதுவம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்.