மருத்துவமனைகளின் படுக்கை விவரம் தெரிந்து கொள்ள மாநகராட்சியின் புதிய செயலி

கோவை மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட கோவிட் கேர் சென்டர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் படுக்கை விவரங்கள் தெரிந்துகொள்ள மாநகராட்சியின் சார்பில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி கொரோனா தொற்றுக்கான சிகிச்சை வழங்கப்படும் மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட கோவிட் கேர் சென்டர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை வழங்க ஒதுக்கப்பட்டுள்ள மொத்த படுக்கைகளின் விவரங்கள் மற்றும் தற்போது காலியாக உள்ள படுக்கைகளின் விவரங்களை உடனுக்குடன் பொதுமக்கள் எளிய முறையில் அறிந்து கொள்ள உதவும் பொருட்டு Hospital Bed Monitoring System (kovaicare-ccmc.com) என்ற வலைதளம் மாநகராட்சியால் வடிவமைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன்  தெரிவித்துள்ளார்.