வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சியில் பிரதான அலுவலகத்தில் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் கோவை மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளான குளங்களை புனரமைத்து மேம்படுத்தும் பணிகள் மற்றும் பூங்காக்கள் அமைத்தல் பணி, சாலைகள் அமைத்தல், பாலங்கள், பாதாள சாக்கடை அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. பொழுதுபோக்கு பூங்காக்கள், சிறுவர் பூங்காக்கள், விளையாட்டுத்திடல், தெருவிளக்குகள், சாலையோர நடைபாதைகள் ஆகிய பணிகள் நடைபெற்று வருவதை குறித்தும், இத்திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், முத்தண்ணன் குளம் போன்ற கோவை மாநகரின் மையப்பகுதியில் உள்ள பல்வேறு குளங்கள் புதிப்பொழிவு பெற்று வருவதை குறித்தும், சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் மாதிரி சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றது.

மேலும் முடிவுற்ற பணிகள் குறித்தும், முடிவடையாமல் உள்ள பணிகள் குறித்தும் கேட்டறிந்து அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்குமாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் துணை ஆணையாளர் மதுராந்தகி, மாநகரப் பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் ஞானவேல், அனைத்து மண்டல பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.