136 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா

வேடப்பட்டி பேரூராட்சி நம்பி அழகன் பாளையம் பகுதியில் அம்மா சமுதாய நலக்கூடம் திறந்து வைத்தும் அதே பகுதியில் நாகராஜபுரம் 136 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி வழங்கினார்.

உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இதுகுறித்து பேசியதாவது, இந்த பகுதி மக்கள் நீண்ட காலமாக பட்டா கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதன்படி அவர்களுக்கு பட்டா வழங்கியது மகிழ்ச்சி  அளிக்கிறது. இந்த நிலத்தின் மொத்த மதிப்பு ரூ. 2 கோடி ஆகும்.

கோவை மாவட்டம் முழுவதும் விடுபட்ட பட்டாக்களை கொடுத்து வருகிறோம். இந்த பட்டா கவர் முதற்கொண்டு இலவசமாக வாங்கி தருகிறோம். இதில் இடைத்தரகர் யாரும் இல்லை, யாரும் அவர்களை நம்பி விட வேண்டாம். மேலும் கொரோனா நோய் தொற்று காரணமாக நோய் தொற்று பெட்டகம் கொடுத்து உள்ளோம்.

மேலும், கோவையில் 5 அரசு கல்லூரி உள்ளது. இதில் 2000 ரூபாய் கட்டணத்தில் மாணவர்கள் படித்து வருகிறார்கள். இதில் மகளிர் தனி கல்லூரி அமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.