நாட்டை வல்லரசாக்க பல திட்டங்கள் என்னிடம் உள்ளது தயாரிப்பாளர் ரவிச்சந்திரன்

 

திரைப்படத் துறை மூலம் தமிழக அரசாங்கத்திற்கு பெருமளவு வருவாய் ஏற்படுத்தகூடிய சில திட்டங்களை அறிவியல்பூர்வமாக வடிவமைத்துள்ளேன் என்று  கோவையைச் சேர்ந்த திரைப்படத்தயாரிப்பு நிறுவனமான MAHAMERU MULTIMEDIA Pvt.Ltd மற்றும் BIG FILM INTERNATIONAL  ஆகிய நிறுவனங்களின் தலைவர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக அரசு, திரைப்பட தயாரிப்பாளர்கள்,  விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையளர்கள் மற்றும் பொது மக்களுக்கு லாபம் தரக்கூடிய வகையில்  ஆன்லைன் மூலமாக அனுமதியின்றி படம் பார்ப்பதை தடுப்பதற்கும் பிரத்தியேகமாக வடிவமைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து திட்டத்தின் செயல்முறைகளையும் மாதிரிகளையும் கொடுத்து விவரித்துள்ளேன் என்று கூறினார்.

இதைத்தவிர,

  1. தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஆண் பெண் இருபாலர்க்கும் சேர்த்து ஒரு கோடி பேருக்கு அரசாங்கத்தின் பணிபயன்களுடன் அரசு வேலைவாய்ப்பு.
  2. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான அதிநவீன திட்டம்
  3. குற்றங்கள் நடைபெறும் விகிதங்களை குறைப்பதற்கான அதிநவீன திட்டம்.
  4. அரசு பள்ளிகளின் தரத்தினை மேம்படுத்துவதற்கான திட்டம்.
  5. விளையாட்டுத்துறை மேம்படுத்துவதன் மூலம் அரசுக்கு வருமான வாய்ப்பு.
  6. அதிமுக தொண்டர்களுக்கு மாவட்ட வாரியாக வியாபார வாய்ப்பு.

தனி நபர் வருமானத்தை உயர்த்திட அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள் ஆகியோருக்கு  பகுதி நேர தொழில் வாய்ப்பு ஏற்படுத்துதல்.

பன்னாட்டு நிறுவனங்கள் தொழில்நுட்ப ரீதியாக வியாபாரத்தை பெருக்கிடவும் எந்த ஒரு தொழிலானாலும் குறுகிய காலகட்டத்தில் குறைந்தது 99,99,999 வாடிக்கையாளர்களை உடனடியாக பெறக்கொடிய அளவுக்கு துல்லியமான ஓரு திட்டத்தினை உருவாக்கியுள்ளேன் என்றார். இந்த முறையில் மாற்றத்தினை வெறும் 24 மணி நேரத்திலிருந்து 90 நாட்களுக்குள் பெற முடியும், இத் திட்டமானது பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

இந்திய நாட்டினை உடனடியாக வல்லரசாக்கும் அளவிற்கு பல செயல் திட்டங்கள் உள்ளது என்றும் விரைவில் அவற்றை தமிழ்நாடு முதல்வரின் பார்வைக்கு கொண்டுசெல்ல இருப்பதாகவும் கூறினார்.