தென்னிந்தியாவின் தூய்மை நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள கோவை

தென்னிந்தியாவின் தூய்மையான 10 நகரங்களில் தமிழகத்திலிருந்து கோவை மட்டுமே இடம்பிடித்திருக்கிறது.

சமீபத்தில் வெளியான தென்னிந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் கர்நாடகாவின் மைசூர் நகரம் முதலிடத்திலும், விஜயவாடா, திருப்பதி, விசாகப்பட்டினம், ஐதராபாத், ராஜமுந்திரி, தும்கூர்,ஓங்கோல், காக்கிநாடா, கோவை என பத்து இடங்கள் தூய்மையான நகரங்களின் பட்டியல் இடம்பிடித்துள்ளன.

இதில், ஆந்திராவில் மட்டுமே, ஏழு நகரங்களும் கர்நாடகாவில் 2 நகரங்களும் தமிழகத்தில் ஒரேயொரு நகரமும் இடம்பிடித்துள்ளன. இது மக்களின் கருத்துக்களை கொண்டே வெளியிடப்பட்ட பட்டியல் என்பது குறிப்பிடத்தக்கது.