கல்லூரி மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய திராவிடன் அறக்கட்டளை

முன்னாள் முதலமைச்சரும், கல்விக்கண் திறந்த பெருந்தலைவருமான காமராஜரின் 118வது பிறந்த நாள் விழா கடந்த 15ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த நாளில், கோவையில் திராவிடன் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான இலவச தனிப்பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.

இதன் தொடக்கமாக கோவை காந்திமாநகரில் மற்றொரு தனிப்பயிற்சி மையம் துவக்கப்பட்டது. இதில்  அறக்கட்டளையின் தலைவர் கோவை பாபு கலந்து கொண்டு தனிப்பயிற்சி மையத்தை துவக்கி வைத்து மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.

மேலும், கல்லூரி செல்லும் ஏழை மாணவி ஒருவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அறக்கட்டளை சார்பில் சமூக பணிகளுக்கான இளைஞர் இயக்கம் தொடங்கப்பட்டு நலப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி, 4வது தனிப்பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது. இதில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி வழங்கப்படும். இந்தாண்டுக்குள் கோவையில் 100 இடங்களில் இலவச பயிற்சி மையம் அமைக்கப்படும்.

கொரோனா அச்சுறுத்தல் உள்ள சூழலில், இந்த தனிப்பயிற்சி மையம் சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படும். அதோடு, கல்லூரி படிக்கும் ஏழை மாணவிக்கு உதவி தொகை வழங்கினோம்.”

என்று கூறினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.