மீண்டும் பீதியைக் கிளப்பும் மாயன் காலண்டர்!

2020 ஆம் ஆண்டு ஒரு மோசமான ஆண்டாக அமைந்துள்ளது என்ற கருத்து உலகின் அனைவரும் சொல்லக்கூடிய ஒன்றாக உள்ளது. கொரோனா, பொருளாதார மந்த நிலை, வெட்டுக்கிளிகள் படையெடுப்பு என ஒன்றன் பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் தற்பொழுது யாராலும் மறக்க முடியாத டிசம்பர் 21 2012 ஆம் ஆண்டை மீண்டும் நினைவு படுத்தும் விதமாக 2020 ஜூன் 21 தான் உலகின் கடைசி நாள் என்று இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.சதிக் கோட்பாட்டாளர்கள் தெரிவித்துள்ள இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாம் தற்பொழுது பயன்டுத்தி வரும் ஜூலியன் காலண்டர் நடைமுறைக்கு வரும் முன் பூமி சூரியனை சுற்றுவதன் அடிப்படையில் கிரிகோரியன் காலண்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜூலியன் காலண்டர் நடைமுறைக்கு வந்ததால் ஒரு ஆண்டிற்கு 11 நாட்கள் குறைந்துள்ளது. இது நடைமுறைக்கு வந்து 268 ஆண்டுகள் ஆகியுள்ளது.

இதில் ஒவ்வொரு ஆண்டும் 11 நாட்கள் குறைந்துள்ளதால் மொத்தம் 2948 நாட்கள் அதாவது 8 ஆண்டுகள் குறைந்துள்ளது. 2020 ல் வாழும் நாம் இந்த கணக்கின் படி 2012 ஆம் ஆண்டில் தான் இருக்கிறோம். அதனால் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 21 தான் வரும் ஜூன் 21 என்கின்றனர்.

இதற்கு பதிலத்துள்ள நாசா அதிகாரி ஒருவர் உலகின் முதல் அழிவு மார்ச் 2003 ஆண்டு நடைபெறும் என்றனர், பிறகு டிசம்பர் 2012 ஆண்டு என்றனர், தற்பொழுது ஜூன் 2020 என்கின்றனர். இதற்கு முன்பு இவர்கள் கூறியது எதுவும் நடக்கவில்லை. இருப்பினும் இவர்கள் கூறிய அந்த ஜூன் 21 ஆம் தேதிக்கு இன்னும் 6 நாட்களே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.