கடுமையான ஊரடங்கு மீண்டும் வருமா? அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்  

 

அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர். ஆகிய இருவரும் கோவை இ எஸ் ஐ மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது, அமைச்சர் வேலுமணி தலைமையில் மாவட்ட நிர்வாகமும், மருத்துவக் குழுவினரும் கொரோனா ஆரம்ப கட்டத்தில் இருந்து சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

தற்போது கூடுதலாக 400 படுக்கைகள் அமைப்பதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தேவை ஏற்படும் நிலையில் தயாராக இருக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். இதுவரை கோவை, நீலகிரி , திருப்பூர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இஎஸ்ஐ- ல் 280 பேர் குணமாகியுள்ளனர்.

அதேநேரம் தற்போது வைரசின் வீரியம் அதிகரித்துள்ளதை அறிந்துள்ளோம். சென்னை, சவாலாக இருந்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். 43 பேர் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சமூகப்பரவல் உள்ளதா என்பதை மத்திய அரசுதான் வெளியிட வேண்டும். சென்னையில் இருந்து நோயாளிகள் யாரும் கோவை கொண்டு வரத் திட்டமில்லை.

கடுமையான ஊரடங்கு மீண்டும் வருமா என்பதைத் தனிமனித வாழ்வாதாரம், கொரோனா தடுப்பு, கொரோனா குணப்படுத்துதல் ஆகியவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மருத்துவக் குழு பரிந்துரையின் பேரில் முதல்வர் பரிசீலிப்பார் என்றார்.