பாதுகாப்புடன் மத வழிபாட்டுத் தலங்களை திறக்க வேண்டும்

தமிழகத்தில் மத வழிபாட்டுத் தலங்களை திறக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வழிபாட்டுத்தலங்கள் திறப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் கூட வழிபாட்டுத் தலங்களை திறப்பதற்கான முடிவை எடுத்துள்ள நிலையில் தமிழகம் இன்னும் இது குறித்த எந்த அறிவிப்பும் தெளிவாக வெளியிடாதது ஏமாற்றத்தை அளிப்பதாக கூறினார். மேலும் தகுந்த பாதுகாப்புடன் தமிழகத்தில் மத வழிபாட்டுத் தலங்களை திறக்க வேண்டும் என்றும் முதலமைச்சருக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.