தாயை எழுப்ப முயன்ற குழந்தைக்கு ஆதரவுக்கரம் நீட்டிய ஷாருக்கான்!

பீகார் ரெயில் நிலையத்தில் தாயை இறந்தது தெரியாமல் அவரை எழுப்ப முயற்சித்த குழந்தையின் மொபைல் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் பெரிதும் வைரலாகியது.

இந்தக் காட்சிகளை பார்த்த பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் குழந்தைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக தெரிவித்துள்ளார். அவர் நடத்தும் மீர் அறக்கட்டளை மூலம் இந்த உதவிகள் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு பெரிதும் வரவேற்கப்பட்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.