நெஞ்சகத் தொற்றுநோய் கண்டறியும் கருவிகள்

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நெஞ்சகத் தொற்றுநோய் மற்றும் கொரோனாவால் ஏற்படும் நெஞ்சகத் தொற்று நோய்களைக் கண்டறியும் நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட 14 வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக துவக்கி வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் தேசிய நலவாழ்வு குழுமத்தின் சார்பில் ரூபாய் 5 கோடியே 40  லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த வாகனங்களின் மூலம் நோயாளிகளின் இருப்பிடத்திற்கு சென்று எக்ஸ்ரே எடுத்து அதன் முடிவினையும் உடனே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

முதல் கட்டமாக 5 வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார் முதல்வர்.  இந்த வாகனங்களின் மூலம் ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கள் உள்ளிட்டவற்றை கண்டறிய முடியும். இந்நிகழ்ச்சியில் மருத்துவத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.