புத்தகத்தின் மீது காதல் கொள்வோம்

எத்தனையோ தொழில்நுட்பம் வளர்ந்தாலும் அது புத்தகத்தின் முதல் பக்கத்திற்கு கூட ஈடாகாது. அத்தனை பலம் கொண்டது. புத்தகம் மட்டுமல்ல அதனை எழுதும் எழுத்தாளர்கள் கூட யாராலும் வெல்ல முடியாது. தனக்கென தனி உலகத்தை படைத்து அதில் அரசாட்சி செய்பவர்கள் எழுத்தாளர்கள்.


புத்தகம் ஒரு மனிதனை மகானாகவும், அசுரனாகவுன், பலரை குழந்தையாகவும், கடவுளாகவும் மாற்றுகிறது, சிலர் இதன் மூலம் காதல்வயப்பட வைக்கிறது. நாம் இதுவரை அறிந்த வரலாற்று உண்மைகள் புத்தகம் மூலமே தான்.
நம்மால் புத்தகம் படிக்கவும் முடியும், எழுதவும் முடியும். படிக்க விருப்பம் இருந்தால் போதும், எழுத காதல் கொள்வோம். புத்தகத்தின் மீது காதல் கொள்வோம். ஒரு நண்பன் நம்முடன் இருப்பான், ஒரு காதலன் நம்மை வழிநடத்துவான். எதுவானாலும் சரி புத்தகம் தீங்கு விளைவிக்காது.