பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் ஆட்சியரிடம் வழங்கிய 4 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 144 தடை உத்தரவு உள்ள நிலையில் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், கோவை சாய்பாபா காலனி பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் மலைவாழ் மக்கள், வடமாநில தொழிலாளர்கள், துடியலூர் அருகே தொப்பம்பட்டி பகுதியில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 200 குடும்பங்கள் உட்பட அனைவரும் அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய், ரவை, கோதுமை உள்ளிட்ட 4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அவ்வமைப்பின் தலைவர் ரபீக், மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

இதற்கு முன்னர் உணவு தேவைப்படுவோர்களுக்கு அமைப்பின் மூலம் உணவுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், நோய் தொற்று பரவாமல் இருக்க பொருட்களை வழங்குபவர்கள் நேரிடையாக பொதுமக்களிடம் வழங்காமல் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார அலுவலகங்கள் மூலம் வழங்கிட வேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து பொருட்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியதாக அவர் தெரிவித்தார்.