ஊரடங்கு நேரத்தில் பணத்தை எப்படி ஸ்மார்ட்டாக செலவு செய்வது?

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பலரும் வேலையின்றி தவித்து வருகின்றனர். அன்றாட அத்தியாவசியங்களுக்கே பணம் இல்லாத சூழல்நிலை நிலவி வருவதால் அதை எப்படி சமாளித்து என்றும் ஏப்படி செலவு செய்வது என்றும் இப்போது பார்க்கலாம்.

அவசர தேவைக்கான பணம் : அவசர தேவைக்காக சேர்த்து வைக்கும் பணத்தின் தொகையை அதிகமாக்குங்கள். இந்த காலகட்டத்தில் அது முக்கியமான ஒன்று. இது மருத்துவச் செலவுகள் மட்டுமன்றி தற்போதைய சூழலுக்கும் பணம் தீர்ந்தால் உதவும். உங்களின் இந்த சேமிப்பு கடந்த 6 மாத சேமிப்பாக இருக்க வேண்டும்.

பட்ஜெட் திட்டம் : தினசரி செய்யும் செலவுகளை எழுதி வையுங்கள். இதுவரை இல்லை என்றாலும் தற்போது செயல்படுத்துங்கள். அதை தினமும் கணக்கிடுங்கள். ஒரு நாளைக்கு எவ்வளவு தேவைப்படுகிறது என்பதை வகுத்துக்கொள்ளுங்கள்.

தேவையற்ற செலவுகளை தவிர்த்தல்: இந்நேரத்தில் அத்தியாவசியத்தைத் தவிர்த்து தேவையற்ற பணச்செலவைத் தவிர்த்தல் நல்லது. ஏதாவது வாங்க வேண்டும் என்றாலும் எழுதி வைத்து ஊரடங்கு நிறைவடைந்து இயல்பு வாழ்க்கை திரும்பியதும் வாங்கிக்கொள்ளலாம்.

ஹெல்த் இன்சூரன்ஸ் : மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் பணம் சேமித்து வருகிறீர்கள் எனில் அதில் கவனம் செலுத்துங்கள். இந்த சமயத்தில் மருத்துவக் காப்பீட்டு திட்ட அதிகாரியைத் தொடர்பு கொண்டு பணத்தை எடுத்துக்கொள்ளும் திட்டங்கள், வழிமுறைகள், கேள்விகள், குழப்பங்களை கேட்டு தெளிவு படுத்திக்கொள்ளுதல் அவசியம். இதனால் கடைசி நேர டென்ஷனை தவிர்க்கலாம்.

ஆன்லைன் பரிவர்த்தனை : ஊரடங்கு, கொரோனா பரவல் என பயத்தில் உறைந்துள்ள நிலையில் நேரடியாக வங்கிகளுக்குச் செல்லுதல், ஏ.டி.எம் மையங்களில் அடிக்கடி பணம் எடுத்தல் போன்றவற்றை தவிர்த்தல் நல்லது. அனைத்தையும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் செய்துகொள்ளுங்கள்.

தற்போது காய்கறிகள், மளிகைப் பொருட்களையும் அரசாங்கமே ஆன்லைனில் விற்பனை செய்வதால் நீங்கள் அத்தியாவசியத் தேவைக்குக் கூட வெளியே செல்ல வேண்டிய அவசியம் தேவையில்லை. அமர்ந்த இடத்திலேயே பணப் பரிவர்த்தனை செய்து வாங்கலாம். அதேசமயம் ஆன்லைனில் தரமான பொருட்களை சரியான விலையில் விற்பனை செய்வதால் விலைஉயர்வு நெருக்கடியையும் சமாளிக்கலாம்.

Sourced