நிவாரண பொருட்கள் மூடையை சுமந்து சென்ற கோவை தாசில்தார்

கோவையில் கொரோனா தடுப்பு பணிகளும், நிவாரணப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு அங்கமாக ஆதரவின்றி தவிப்போருக்கு உணவு வழங்க கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் சமூக கூடம் அமைத்து அதில் தினமும் 3 வேலையும் 500 பேருக்கு  இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.

இதற்கான பொருட்கள் சமூக ஆர்வலர்கள், தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் வழங்கி வருகின்றனர். இந்த 25 கிலோ மற்றும் 75 கிலோ நிவாரண பொருட்கள் கொண்ட மூடைகள் சமூக கூடத்திற்கு வந்தது. இதனை கோவை வடக்கு தாசில்தார் மகேஷ் குமார் தொழிலாளர்களுடன் சேர்ந்து இறக்கும் பணியில் ஈடுபட்டனர். தாசில்தார் மகேஷ் குமார் அரிசி மூடையை சுமந்து சென்றது அங்கிருந்தோரை ஆச்சாரியப்படுத்தியது. இந்நிகழ்வு பொது மக்களுடையே வெகுவாக வரவேற்பை பெற்றது.