ஆர்.வி கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா

டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் வே.சுகுணா அனைவரையும் வரவேற்று கல்லூரி ஆண்டறிக்கையை வாசித்தார். கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் ராமகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். கோவை ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.பி.எல்.சிவக்குமார் ஆண்டு விழா உரையாற்றினார். அவர் பேசுகையில், “தன் வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்து நல்ல நிலையை அடைந்ததற்கு வழிகாட்டியாகவும், முன்மாதிரியாகவும் விளங்கிய ஆர்.வி. கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் ராமகிருஷ்ணன் நினைவு கூர்ந்தார். மேலும் மாணவர்கள் நல்ல கல்வியையும், ஒழுக்கத்தையும் கற்று இந்த சமுதாயத்தில் நல்ல குடிமகன்களாக திகழ வேண்டும். பெற்றோர்களை மதித்து நடந்தால் வாழ்க்கையில் உயரலாம்” என்று எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த கல்வியாண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக் கோப்பைகளும், கல்லூரி வளர்ச்சிக்கு முழு மனதோடு ஈடுபட்ட சிறந்த மாணவருக்கான கொண்டசாமி நாயுடு விருதும், சிறந்த மாணவிக்கான ஸ்வர்ண காமாட்சி விருதும் சிறப்பு விருந்தினர் பாராட்டி வழங்கினார்.

இந்நிகழ்வில் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் ராமகிருஷ்ணன் சகோதரி வத்சலா மற்றும் அவரது கணவர் ஜெகநாதன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிறைவாக மூன்றாம் ஆண்டு உயிர் தொழில்நுட்பவியல் துறை மாணவி லேகா நன்றியுரை கூறினார். இந்நிகழ்வில் அனைத்துத்துறை பேராசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.