இந்துஸ்தான் கல்லூரியில் வர்த்தக மேலாண்மை நிகழ்ச்சி

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் பிபிஏ துறை சார்பில் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேரு கல்லுரிகளில் இருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் இடைக்கால வினாடி வினா, சிமுலேஷன், நிதி வழிகாட்டிகள் போன்ற பல்வேறு நிகழ்வுகளைக் கொண்டடிருந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினராக ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் ஆலோசகர் நரம்பியல் நிபுணர் டாக்டர் அருணா தேவி கலந்துகொண்டார். நிகழ்வின் வெற்றியாளர்களுக்கு ரொக்க பரிசு, கோப்பைகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.